போக்சோ வழக்கில் இரண்டு பேருக்கு தீர்ப்பு

X
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு 15 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வடமதுரை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (39) மற்றும் இவருக்கு உதவியாக இருந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் திண்டுக்கல் R.M காலனியைச் சேர்ந்த செல்வி(49) என்பவரை வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின்படி வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி, நீதிமன்ற முதல்நிலை காவலர் பொன்மணி மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி சீரிய முயற்சியால் திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளிகளான சிவக்குமார் என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 09 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 1,12,000/- அபராதமும் மற்றொரு குற்றவாளியான செல்வி என்பவருக்கு 07 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இந்தாண்டு இதுவரை 26 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

