மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

X
குமரி மாவட்டம் அருமனை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது விடுமுறை என்பதால் மாணவி தனது வீட்டில் இருந்தார். இந்த நிலையில் எப்போதும் தனது செல்போனை நீண்ட நேரம் பயன்படுத்தி வந்தாராம். இது குறித்து பெற்றோர் விசாரித்த போது, மாணவி பக்கத்து ஊரை சேர்ந்த ஒரு மாணவருடன் பேசியதை கண்டுபிடித்தனர். இதை அடுத்து பெற்றோர் மகளை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் நேற்று செல்போனில் மாணவருடன் நீண்ட நேரம் பேசினார். ஆத்திரமடைந்த பெற்றோர் மாணவியை திட்டினர். இதனால் வேதனயடைந்த மாணவி வீட்டு மாடியில் ஏறி அங்கு இருந்து கீழே குதித்தார். இதில் மாணவிக்கு இடுப்பு எலும்பு உடைந்து படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை தக்கலை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். அருமனை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

