கோவை: சட்டவிரோத சரளை மண் கடத்தல்-லாரி பறிமுதல் !
கோவை மாவட்டம் சூலூரில், வருவாய்த் துறையினர் நேற்று நடத்திய வாகன சோதனையில், உரிய அனுமதியின்றி சரளை மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. அரசூர் அருகே நடைபெற்ற இந்த சோதனையின்போது, லாரியை நிறுத்தியதும் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். விசாரணையில், லாரியில் கொண்டு செல்லப்பட்ட 3 யூனிட் சரளை மண்ணுக்கு அரசு அனுமதி இல்லை என்பதும், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் அனுமதிச் சான்றிதழ்கள் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. கருமத்தம்பட்டி வருவாய் ஆய்வாளர் மாணிக்கவாசகம் அளித்த புகாரின் பேரில், சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஓட்டுநர் சின்னராசுவை தேடி வருகின்றனர்.
Next Story



