கோவை: மாரியம்மன் கோவிலில் கண் கவர் கும்மியாட்டம்!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு நரசிம்மநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் கும்மியாட்டம் நடைபெற்றது.
கோவை துடியலூர் அடுத்த, நரசிம்மநாயக்கன் பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம், சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறுமிகள், இளம் பெண்கள் மற்றும் பெண்கள் குழுக்களாக பிரித்து ஒரே மாதிரியான வண்ணமயமான ஆடைகள் அணிந்து கும்மிப்பாட்டிற்கு கிராம மக்கள் மத்தியில் சங்கமம் கலைக் குழுவினர் கும்மி அடித்து நடனம் ஆடியது காண்போரை கவரும் வகையில் அமைந்திருந்தது.
Next Story