தமிழக வெற்றி கழகத்தின் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு தங்க நாணயம் பரிசு

X
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் பல்லடம் ஒன்றிய செயலாளர் தளபதி ஸ்டாலினின் 36 வது பிறந்தநாளை முன்னிட்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் ராகுலுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் தேசராஜ், வாக்குச்சாவடி மாவட்ட அமைப்பாளர் மகேஷ் குமார், ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன் ,சுரேஷ், கார்த்திக், பிரபு ,கோபால், பார்த்திபன், கிருத்திகா, சிவகாமி ,சங்கீதா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
Next Story

