சாலை பணியை அமைச்சர் தொடக்கி வைத்தார்

சாலை பணியை அமைச்சர் தொடக்கி வைத்தார்
X
விலவூர் பேருராட்சி
குமரி மாவட்டம் விலவூர் பேரூராட்சிக்குட்பட்ட மணலி பாலம் முதல் பாண்டி விளை வரை கால்வாய் கரை சாலை சீரமைக்க நபார்டு நிதி ரூபாய் 2 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று துவக்கி வைத்தார். பிலவர் பேரூராட்சி தலைவர் பில் கான் முன்னிலை  வகித்தார்.       நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், -  கடந்த ஆட்சி காலத்தில் வளர்ச்சி பணிகளில் குமரி மாவட்டம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு பணிகளுக்கு நிதி உதவி என்பது மிக குறைவாக இருந்தது. தற்போது திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அரசு நிதி ஒதுக்கி வருகிறது. அதன் அடிப்படையில் இந்த சாலையும் சீரமைக்கப்பட்டு வருகிறது. என கூறினார். இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஜோவின், செயல் அலுவலர் சசிகுமார், கவுன்சிலர்கள் உட்பட ஏராளமானார் கலந்து கொண்டனர்.
Next Story