தூய்மை பணியாளர்களை வைத்து நீர் மோர் பந்தலை திறந்து வைத்த ராஜபாளையம் தவெக கட்சியினர்

தூய்மை பணியாளர்களை வைத்து  நீர் மோர் பந்தலை திறந்து வைத்த ராஜபாளையம் தவெக கட்சியினர்
X
தூய்மை பணியாளர்களை வைத்து நீர் மோர் பந்தலை திறந்து வைத்த ராஜபாளையம் தவெக கட்சியினர்
இராஜபாளையத்தில் தூய்மை பணியாளர்களை வைத்து நீர் மோர் பந்தலை திறந்து வைத்த ராஜபாளையம் தவெக கட்சியினர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகள் தலைவர்கள் இருப்பினும் தூய்மை பணியாளர்களை கொண்டு வித்தியாசமான அணுகு முறையில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த தமிழக வெற்றி கழகம் கட்சியினர். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைக்கு வரும் நிலையில் ஒரு சில குறிப்பிடத்தக்க மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கோடை வெயில் வாட்டி வதைக்கி வந்த நிலையில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் பொருட்டு விருதுநகர் மேற்கு மாவட்டம் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியை சார்ந்த தமிழக வெற்றி கழகம் கட்சியினர் மற்ற கட்சிகளைப் போல் கட்சித் தலைவர்கள் நிர்வாகிகளை வைத்து தண்ணீர் பந்தல் திறக்காமல் வித்தியாசமான அணுகு முறையில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர். அதன்படி முக்கிய பகுதியில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்த அவர்கள் அவர்களுக்கு மரியாதை செய்யும் நோக்கில் வெடி வெடித்து வரவேற்றனர். பின்னர் முடங்கியர் சாலையில் கழக உறுப்பினர் சமீர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தண்ணீர் பந்தலினை மாவட்ட கழக துணைச் செயலாளர் மருத்துவர் யமுனா முன்னிலையில் தூய்மை பணியாளர்கள் மூலம் திறந்து வைத்து வித்தியாசமான அணுகுமுறையை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் நீர் மோர் மற்றும் தண்ணீர் பழம் ஆகியவற்றை அருந்தி தாகம் தணித்தனர். மேலும் தூய்மை பணியாளர்கள் மூலம் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பு பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story