கோவை: தொழில் அதிபர் மற்றும் உறவினர் மீது போக்சோ வழக்கு

X
பொள்ளாச்சியில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தாக்கியதாக தொழில் அதிபர் அருண்குமார் மற்றும் உறவுக்கார பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வசிக்கும் 17 வயது சிறுமி, பெற்றோர் பிரிந்ததால் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். தென்னை நார் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சிறுமிக்கு, நிறுவன உரிமையாளர் அருண்குமார் பாலியல் தொல்லை கொடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், அருண்குமார் மற்றும் உறவுக்கார பெண் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

