திமுக அரசின் சாதனைகளை காணொளி மூலம் ஒளிபரப்பு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி சார்பில் திமுக அரசின் நான்கு ஆண்டுகள் சாதனை குறித்த காணொளி காட்சிகளை உசிலம்பட்டி பழைய பேருந்து நிலையம் முன்பு எல்.இ.டி திரை மூலம் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. இந்த எல்.இ.டி திரையை உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் சக்திவேல், நகர் மன்ற துணை தலைவர் தேன்மொழி, உசிலம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கப்பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தனர். இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு திமுக அரசு பொறுப்பேற்ற பின், கொண்டு வரப்பட்ட திட்டங்கள், மகளிருக்கான விடியல் பயணங்கள் குறித்த காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story




