கோவை: பச்சிளம் குழந்தைகளுக்கான பயிற்சி கருத்தரங்கம்!

கோவை: பச்சிளம் குழந்தைகளுக்கான பயிற்சி கருத்தரங்கம்!
X
கோவை அரசு மருத்துவமனை சார்பில் பச்சிளம் குழந்தைகளுக்கான ஆக்சிஜன் வினியோக சாதனங்கள் மற்றும் செயற்கை சுவாசம் குறித்த பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
கோவை அரசு மருத்துவமனை சார்பில் பச்சிளம் குழந்தைகளுக்கான ஆக்சிஜன் வினியோக சாதனங்கள் மற்றும் செயற்கை சுவாசம் குறித்த பயிற்சி கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குனர் டாக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். மேலும், கருத்தரங்கிற்கான நூலையும் அவர் வெளியிட்டார். இந்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கில் கோவை அரசு மருத்துவமனை மட்டுமின்றி பல்வேறு அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த 136 மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, தேசிய நல்வாழ்வு இயக்கம் திட்ட ஆலோசகர் சீனிவாசன், சுகாதார இணை இயக்குனர் சுமதி, மாவட்ட சுகாதார அதிகாரி பாலுசாமி, அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு துறை தலைவர் சசிகுமார், செந்தில்குமார் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கருத்தரங்கில் பங்கேற்றனர். கருத்தரங்கம் நிறைவடைந்ததும், தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குனர் டாக்டர் அருண் தம்புராஜ் திடீரென கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புதிதாக கட்டப்பட்டு வரும் அவசர சிகிச்சை மீட்பு மைய கட்டிடத்தை பார்வையிட்ட அவர், கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
Next Story