கோவை: பள்ளிகளுக்கு பாட புத்தகங்கள் அனுப்பும் பணி துவக்கம் !

X
கோவையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள 175 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கான பாடப்புத்தகங்கள் அனைத்தும் கோவை ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டன. இப்பள்ளியிலிருந்து, அந்தந்தப் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் பணி தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story

