ஆம்பூர் கீழ்முருங்கை பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் லிங்கத்தின் மீது நாகம் ஒரு மணி நேரம் படமெடுத்த படி காட்சி.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கீழ்முருங்கை பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் லிங்கத்தின் மீது நாகம் ஒரு மணி நேரம் படமெடுத்த படி காட்சி. தீபாராதனை காட்டி பக்தர்கள் வழிபாடு. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ் முருங்கை பகுதியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் கருவறையில் லிங்கத்தின் மீது நாகம் படமெடுத்தபடி இருப்பதைக் கண்ட கோயில் அர்ச்சகர் அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்க இதனை காண பொதுமக்கள் திரண்ட நிலையில் அர்ச்சகர் நாகத்திற்கு தீபாரதனை காட்டி அதனை வழிபட்டனர். தொடர்ந்து ஒரு மணி நேரமாக பக்தர்களுக்கு படமெடுத்தபடி காட்சி கொடுத்த நாகம் பிறகு கருவறையில் இருந்து விலகி வயல்வெளியை நோக்கி சென்றது. மேலும் இதே போல கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயில் கருவறையில் முன்பாக உள்ள நந்தி மீது நாகம் படம் எடுத்து காட்சி கொடுத்தது இது இரண்டாவது முறையாக மீண்டும் நாகம் லிங்கத்தின் மீது படம் எடுத்தபடி காட்சி கொடுத்ததால் பக்தர்கள் இதனை அதிசயமாக கருதி வழிபட்டு சென்றனர்.
Next Story



