ராயனூரில்,தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு கொசு ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு.
ராயனூரில்,தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு கொசு ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் பகுதியில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்பு, தேசிய டெங்கு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில், மருத்துவர் பிரியங்கா, செவிலியர் சரோஜினி உள்ளிட்டோர் கலந்து கொண்டு டெங்கு ஒழிப்பு தொடர்பாக பொது மக்களுக்கு விளக்கங்களை அளித்தனர். இதனைத் தொடர்ந்து தேவையற்ற பொருட்களை வெளியில் கொட்டுவதால், மழைக்காலத்தில் அந்த பொருட்களில் மழை நீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விளக்கி கூறினர். தற்போது கரூர் மாவட்டத்தில் ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகின்ற சூழலில், விரைவில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது. ஆகையால் பொதுமக்களிடையே தற்போது இருந்தே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பொதுமக்களுடன் உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற போது மக்கள் டெங்கு கொசு ஒழிப்பு தொடர்பான உறுதி மொழியை ஏற்றனர்.
Next Story




