போக்குவரத்து காவலர்கள் பாதுகாப்பு நிழலகம்

X
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் காவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியான மனம் திறந்து நிகழ்ச்சியின் போது பல போலீசார் விரிசுருள் சிறை நோய் மூலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் மாவட்ட முழுவதும் இதனால் பாதிக்கப்பட்டுள்ள போலீசாரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் போக்குவரத்து காவலர்கள் இந்த நோயினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதற்கு அவர்கள் பணியில் நீண்ட நேரம் நின்று கொண்டே வேலை செய்வதனால் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் பணியின் போது போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்கும் போது சற்று உட்கார்ந்து பணி செய்ய உட்காரும் வகையிலான பேரிக்கேட் போக்குவரத்து காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் வழங்கப்பட்டது. முதல் கட்டமாக மாநகரில் ஏழு இடங்களில் இது வைக்கபட்டுள்ளது. இது மாவட்டம் முழுவதும் நீட்டிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின், உதவி ஆய்வாளர்கள் சமித் அட்ரலின், வள்ளிச்செல்வி மற்றும் போக்குவரத்து காவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story

