குளத்தில் தேங்கிய ஆகாயத்தாமரை அகற்ற கோரிக்கை

குளத்தில் தேங்கிய ஆகாயத்தாமரை அகற்ற கோரிக்கை
X
கோரிக்கை
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கன்னியப்பிள்ளைபட்டி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இங்கு ஊரின் மையப்பகுதியில் குளம் ஒன்று அமைந்துள்ளது. அந்த குளத்தில் ஆகாயத்தாமரை அதிக அளவில் வளர்ந்து உள்ளதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளது. ஆகாயத்தாமரையை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
Next Story