குடிநீர் பைப் கசிவை சரி செய்ய கோரிக்கை!

X
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய பஜாரில் உள்ள குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் கசிந்து தேங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதே இடத்தில் 2 முறை தண்ணீர் கசிந்தது. அப்போது, பேரூராட்சி அதனை சரி செய்தது. தற்போது அதேபோல் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. குடிநீர் பைப் கசிவை சரி செய்ய வேண்டும் என மக்கள் பேரூராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

