தொழிற் சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டம்

தொழிற் சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டம்
X
தொழிற் சங்கத்தினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அரியலூர்,மே 17- அரியலூரிலுள்ள ஏஐடியுசி அலுவலகத்தில், அனைத்து தொழிற் சங்கத்தினர் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில், தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட தொகுப்பு திருத்தங்களை திரும்ப பெற வேண்டும். ஒப்பந்தம், தினக்கூலி, வெளிச்சந்தை முறை பயிற்சியாளர் போன்ற நடமுறைகளை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளிக்கு சம வேலைக்கு சம ஊதியம், குறைந்தப் பட்ச ஓய்வூதியம் ரூ,9 ஆயிரம் என நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை ஜூலை 9 ஆம் தேதி நடத்துவது என்றும், அதற்கு முன்னதாக மே 20 ஆம் தேதி ஆர்ப்பாட்டமும், ஜூலை 2}இல் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டத்தில் தெருமுனைப் பிரசாரமும் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்ட பொதுத் செயலர் டி.தண்டபாணி, தொமுச மாவட்டச் செயலர் ஆர்.மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலர் பி.துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் தலைமை வகித்து பேசினர்.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story