கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

X
அரியலூர், மே.18 - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கடலூர் மாவட்டத்தில் 21 நாட்களுக்கு மாணவ மாணவிகளுக்கான கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமை நடத்தி அதன் நிறைவு விழா கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் இன்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். நீ பயிற்சி முகாமில் தடகளம் கால்பந்து குத்து சண்டை கைப்பந்து மற்றும் டேக்வாண்டோ ஆகிய விளையாட்டுகளில் இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் 18 வயதுக்கு உட்பட்ட 500 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவில் உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் தமிழ் அரிமா பா மொ. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகங்களை பரிசு அளித்து சிறப்புரை ஆற்றினார். விழாவில் பன்னாட்டு விளையாட்டு வீரர் சுமித்ரா சர்வதேச கைப்பந்து விளையாட்டு வீரர் மகாராஜா கடலூர் தெற்கு ஒன்றிய திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சிவகுருநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர். மேலும் இவ்விழாவில் விளையாட்டு பயிற்றுநர்கள் விளையாட்டு வீரர்கள் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர். இறுதியாக தடகள பயிற்றுநர் மாயகிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார்.
Next Story

