பர்கூர் கிரானைட் கற்கள் கடத்திய இண்டு லாரிகள் பறிமுதல்.

பர்கூர் கிரானைட் கற்கள் கடத்திய இண்டு லாரிகள் பறிமுதல்.
X
பர்கூர் கிரானைட் கற்கள் கடத்திய இண்டு லாரிகள் பறிமுதல்.
கிரானைட் கற்கள் கடத்தப்படுவதை தடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட கனிம வள உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அலுவலர்கள் பர்கூர்-ஜெகதேவி சாலையில் நின்ற ஒரு லாரியை சோதனை செய்த போது அதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான இரண்டு ராட்சத கிரானைட் கற்களை கடத்தியது தெரிந்தது. மேலும் அதே சாலையில் ஜி.நாகமங்கலம் அருகே நின்ற மற்றொரு லாரியில் சோதனை செய்ததில் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான கிரானைட் கற்கள் கடத்தி வந்தது தெரிந்தது லாரிகளில் கிரானைட் கற்கள் கடத்தியது குறித்து அதிகாரிகள் பர்கூர் காவரல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தனர். மெலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story