வடமதுரை அருகே கிணற்றில் பெண் சடலம்

X
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா வடமதுரை சித்துவார்பட்டி அருகே மலைக்கோட்டையைச் சேர்ந்த ராமசாமி என்பவர் மகள் வினோதினி கடந்த சில தினங்களாக காணவில்லை என்று ராமசாமி வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் மலைக்கோட்டை அருகே உள்ள கிணற்றில் சடலம் ஒன்று கிடப்பதாக வடமதுரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்திய போது காணவில்லை என்று புகார் அளித்த வினோதினி சடலமாக இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனைஅடுத்து வேடசந்தூர் தீயணைப்புத் துறையினர் வினோதினியின் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story

