கோவை: தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு-ஆட்சியர் அறிவுரை !

X
கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்குச் சொந்தமான 945 வாகனங்களை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் நேற்று அவிநாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நேரில் ஆய்வு செய்தார். பல்வேறு பாதுகாப்பு அம்சங்களான முதலுதவி பெட்டி, கேமராக்கள், அவசரகால கதவு, புத்தகப்பை வைக்கும் இடம், பின்புற எச்சரிக்கை ஒலிப்பான் மற்றும் தீயணைப்பு கருவி ஆகியவை முறையாக பொருத்தப்பட்டுள்ளதா என சரிபார்க்கப்பட்டது. ஆட்சியர் முன்னிலையில் தீயணைப்புத் துறையினர் ஓட்டுநர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும், ஓட்டுநர்களுக்கான கண் சிகிச்சை முகாமும் நடத்தப்பட்டது. வட்டார போக்குவரத்து, வருவாய், தீயணைப்பு மற்றும் காவல் துறை அதிகாரிகள் இந்த ஆய்வில் இணைந்து பள்ளி பேருந்துகளின் பாதுகாப்பை உறுதி செய்தனர். ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் பவன் குமார், வாகனங்கள் முறையாக ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதிவேகமாக இயக்குபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு நடத்தப்பட்டு ஓட்டுநர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். மீதமுள்ள 526 வாகனங்கள் இன்று ஆய்வு செய்யப்பட உள்ளன.
Next Story

