ராணிப்பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து பசு மாடுகள் பலி!

X
ராணிப்பேட்டை மாவட்டம் வேட்டாங்குளத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவருக்கு சொந்தமான 3 பசு மாடுகள் அங்குள்ள ஏரி கால்வாய் பகுதியில் நேற்று மேய்ந்து கொண்டிருந்தது.மாலையில் பலத்த காற்று வீசிய நிலையில் அங்குள்ள மின்கம்பத்தில் இருந்து வயர்கள் அறுந்து மாடுகள் மீது விழுந்ததில் மூன்று பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து நெமிலி வட்டாட்சியர் ராஜலட்சுமி மற்றும் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
Next Story

