மரக்கன்றுகளை பராமரிக்கும் பணியில் சமூக ஆர்வலர்கள்

X
மரக்கன்றுகள் பராமரிப்பு பணி யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 215 ஆவது வார மரக்கன்றுகள் பராமரிப்பு பணி ஒத்தக்கடை அம்மா பூங்காவில் இன்று (மே.18) தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் ராகேஷ் முன்னிலை வகித்தார். உறுப்பினர் பாஸ்கரன் வரவேற்றார். உறுப்பினர் கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் தென்னவன் அவர்கள் மரங்களின் பயன்கள், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்து உரை நிகழ்த்தினர். அம்மா பூங்கா நடைபாதையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது. 20க்கும் மேற்பட்ட மரங்களுக்கு பராமரிப்பு பணியும், கவாத்து பணியும் நடைபெற்றது. விழாவில் யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர்கள் சிலம்பம் மாஸ்டர் பாண்டி, உறுப்பினர்கள் ஸ்டெல்லா மேரி, கபிலன் சமூக ஆர்வலர் மாற்றம் தேடி பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளால் மரக்கன்றுகள் பராமரிக்கப் பட்டன. நிகழ்வில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு களப்பணி செய்தனர். மாணவி அரிய நட்சத்திரா நன்றி கூறினார்.
Next Story

