கோவை: தொண்டாமுத்தூர் பகுதியில் வெளுத்து வாங்கும் கனமழை !

காலையிலிருந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் தொண்டாமுத்தூர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று திடீரென பெய்த சாரல் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தொண்டாமுத்தூர், ஓணாப்பாளையம், வேடபட்டி, வடவள்ளி மற்றும் மருதமலை ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு கனமழை பெய்தது. காலை முதல் நிலவிய வெப்பமான காலநிலையைத் தொடர்ந்து, மதிய வேளையில் பெய்த இந்த மழையானது அப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியது. இதனால், வெப்பத்தால் அவதியுற்றிருந்த பொதுமக்கள் பெரும் நிம்மதியடைந்தனர். மழையின் காரணமாக சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையானது அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியையும், குளிர்ச்சியையும் ஒருசேர வழங்கியுள்ளது.
Next Story