பொன்னேரி அருகே ஆற்றில் மூழ்கி பெண் உயிரிழப்பு

X
பொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் நீரில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு சடலத்தை கைப்பற்றி காவல்துறை விசாரணை. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணி கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி இன்பவள்ளி 74. சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் மூதாட்டி இன்பவள்ளி ஆரணி ஆற்றங்கரை பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கால் தவறி ஆற்றில் விழுந்த மூதாட்டி இன்பவள்ளி சிறிது நேரத்தில் சடலமாக மிதந்து கிடந்தார். ஆற்றில் பெண் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் ஆரணி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஆற்றில் மிதந்த பெண் சடலத்தை மீட்டனர். விசாரணையில் மூதாட்டி இன்பவள்ளி கால் தவறி ஆற்றில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதனை எடுத்து மூதாட்டி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஆரணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

