குமரி பகவதி கோவில் தெப்பக்குளம் ரசீரமைப்பு துவக்கம்

குமரி பகவதி  கோவில் தெப்பக்குளம் ரசீரமைப்பு துவக்கம்
X
ரூ. 41 லட்சத்தில்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளம் ரூ.41 லட்சம் செலவில் சீரமைக்கப்படுகிறது. நீர்ப்பாசனம், பராமரிப்பு பற்றாக்குறை காரணமாக குளம் வறண்டது. வரும் ஜூன் 9-ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, இன்று சீரமைப்பு பணிகள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் தலைமையில் துவக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத் தலைவர்ஜெனஸ் மைக்கேல், கோவில் மேலாளர் ஆனந்த், பொறியாளர் ராஜ்குமார், அறங்காவலர் குழு உறுப்பினர் துளசிதரன் நாயர் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story