ஊத்துக்கோட்டை அருகே பத்து நாள் கோலாகல திருவிழா பிரம்பாண்டமாய் நடந்துக் கொண்டிருக்கிறது
திருவள்ளூர் : ஊத்துக்கோட்டை அருகே போன்ற வாக்கத்தில் கமலநாயகி சமேத கரியமாணிக்க பெருமாள் கோவிலில் தேரோட்டம் கிராம மக்கள் வடம் பிடித்து இழுத்து பக்தியுடன் வழிபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த போந்தவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கமலவல்லி தாயார் சமேத கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் கடந்த 11 ஆம் தேதி துவங்கியது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷங்கள் முழங்க பெருமாளை வழிபட்டனர். கடந்த 11/05/2025 தொடங்கி வருகின்ற 19/05/2025 வரை யாளி, சேஷ,சந்திரபிரபை,பல்லக்கு,கருட,அனுமன்,திருத்தேர், குதிரை போன்ற வாஹனத்தில் தினமும் இரவு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
Next Story




