காந்திகிராமம் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மாணவ- மாணவிகள் ஆர்வம்.

காந்திகிராமம் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மாணவ- மாணவிகள் ஆர்வம்.
காந்திகிராமம் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மாணவ- மாணவிகள் ஆர்வம். கரூர் மாவட்டம், காந்திகிராமம் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளி வளாகத்தில், கரூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் கிச்சாஸ் மார்ட்டியல் ஆர்ட்ஸ் அண்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து நடத்திய கரூர் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி இன்று நடைபெற்றது. நடைபெற்ற போட்டியில் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கான தனித்தனி போட்டிகள் நடைபெற்றது. நடைபெற்ற போட்டியில் ஒற்றைக்கம்பு வீச்சு, தொடும் முறை போட்டிகள், சப் ஜூனியர், யூத் மற்றும் பொது பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற மாணவ- மாணவிகள் வெற்றி பெறும் முனைப்போடு தங்களது திறன்களை வெளிப்படுத்தினர். போட்டிகளை அமைப்பின் மாவட்ட தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான மலைப்பசாமி, மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கதிரவன் ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
Next Story