மருதம் தாங்கல் ஏரியை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்

மருதம் தாங்கல் ஏரியை துார்வார விவசாயிகள் வலியுறுத்தல்
X
மருதம் தாங்கல் ஏரியை துார்வார, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், மருதம் கிராமத்தில் தாங்கல் ஏரி உள்ளது. இந்த தாங்கல் ஏரி 100 ஏக்கர்பரப்பளவு உடையது. மழைக்காலத்தில் தாங்கல் ஏரி நிரம்பும்போது, இந்த தண்ணீரை கொண்டு, 180 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த தாங்கல் ஏரி பல ஆண்டுகளாக துார் வாராமல், நீர்ப்பிடிப்பு பகுதி துார்ந்த நிலையில் உள்ளது.இதனால், மழை நேரத்தில் தாங்கல் ஏரியில் குறைந்த அளவே தண்ணீர் சேகரமாகி வருகிறது. தாங்கல் ஏரியில் போதுமான அளவு தண்ணீர் சேகரமாகாததால், ஒரு போகத்திற்கு மட்டுமே தண்ணீர் பயன்படுகிறது. கடந்த பருவ மழையின்போது தாங்கல் ஏரி முழுமையாக நிரம்பி இருந்தது. தற்போது, கோடை வெயிலின் தாக்கத்தினால் தண்ணீர் இன்றி வறண்டு, செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. இதை பயன்படுத்தி மருதம் தாங்கல் ஏரியை துார்வார, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story