ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் திருடிய வாலிபர் கைது.

ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் திருடிய வாலிபர் கைது.
X
ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் திருடிய வாலிபரை போலீசார்  கைது செய்தனர்
.பரமத்திவேலூர்,மே.18:    பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 42), ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று சரவணன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர் ஒருவர் சரவணனின் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த வெள்ளி குத்துவிளக்கு, பித்தளை மற்றும் வெண்கல பொருட்களை ஒரு மூட்டையில் கட்டிக் கொண்டு இருந்துள்ளார். அதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மர்ம நபரை கையும் களவுமாக பிடித்து வேலூர் போலீசார் மற்றும் சரவணனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மர்ம நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சேலம் குகை பகுதியை சேர்ந்த மாதையன் மகன் சிவா (23) என்பதும், தற்போது பரமத்திவேலூரில் உள்ள உப்பிலியர் தெருவில் வசித்து வருவதும் தெரியவந்தது. இது குறித்து சரவணன் வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில்போலீசார் வழக்குப்பதிந்து சிவாவை கைது செய்துனர். பின்னர் பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் பரமத்தியில் உள்ள கிளைச்சிறையில் போலீசார் அடைத்தனர்.
Next Story