முன்னாள் இராணுவ வீரரின் துப்பாக்கி சூடு.

X
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கூடக்கோவில் பாறைகுளம் பகுதியைச் சேர்ந்த மாரிசாமி என்ற முன்னாள் ராணுவ வீரர் அதே பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான மணிகண்டன் என்பவருக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். இந்நிலையில் முன்னாள் ராணுவ வீரர் மாரிச்சாமிக்கும், உறவினர் மணிகண்டனுக்கும் இன்று (மே.18) காலையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது மாரிசாமி கையில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மணிகண்டனை மிரட்ட தொடங்கி இருக்கிறார். ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடக் கூடாது என்று மணிகண்டனின் சகோதரர் உதயகுமார் சமாதானம் செய்ய சென்றுள்ளார். அப்போது மாரிசாமி கையில் வைத்திருந்த துப்பாக்கியால் ஆவேசமான சுட்டுள்ளார். அப்போது துப்பாக்கி குண்டு உதயகுமாரின் வயிற்றுப் பகுதியில் பாய்ந்துள்ளது. மேலும் சரமாரியாக மாரிசாமி சுட்டபோது, அருகில் விளையாடிக் கொண்டிருந்த கிஷோர் என்ற 14 வயது சிறுவனான பள்ளி மாணவனும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன்பின் உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு உதயகுமாருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பள்ளி மாணவன் லேசான காயத்துடன் தப்பித்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

