இரும்பு உருக்கும் ஆலையில் பயங்கர விபத்து: ஒடிசா மாநில தொழிலாலி உயிரிழப்பு மேலும் பலர் படுகாயம்
திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி அருகே தனியார் இரும்பு உருக்கு ஆலையில் இரும்பு உருக்கும் பிரிவில் விபத்து ஏற்பட்டு ஒடிசா மாநில தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதி திருவள்ளூர் மாவட்டம் பாத்த பாளையம் காமாட்சி இரும்பு உருக்கும் தனியார் ஆலை இரும்பு குழம்பை உருக்கி கையாளும் பிரிவில் கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஒடிசாவை சேர்ந்த திரிநாத் பாசு படுகாயம் அடைந்து உயிரிழப்பு உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த ரிஜேஷ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர் மேலும் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு இரும்பு உருக்கு ஆலைகளில் அடிக்கடி இதுபோன்று விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதை ஆகி வருகிறது வடமாநில தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமல் இரும்பு உருக்கு ஆலைகளில் பாதுகாப்பு வசதிகள் குறைபாடு உள்ளதால் இதுபோன்று விபத்துகள் ஏற்பட்டு அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுவதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்
Next Story




