ஜெயங்கொண்டம் அருகே ஏரிக்கு குளிக்க சென்ற நீதிபதி மாயம்*தொடர் மழையால் தீயணைப்புத் துறையினரின் தேடும் பணி தொய்வு* நீதிபதியை காணாமல் குடும்பத்தினர் கவலை*

X
அரியலூர், மே.18- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு என்பவரது மகன் நீதிபதி (47) வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் அதே பகுதியில் மெயின் ரோட்டில் உள்ள தண்ணீர் பந்தல் என்ற ஏரியில் இன்று 18.05.25 மாலை 5 மணி அளவில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஏரி கரையோரத்தில் அவர் தனது ஆடைகளை கழட்டி வைத்து விட்டு குளிக்க சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் ஏரிக்கு சென்று தேடிய போது கரையோரம் கழட்டி வைக்கப்பட்ட ஆடைகள் மட்டுமே இருந்துள்ளது நீதிபதியை காணவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஜெயங்கொண்டம் போலீசாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடுதல் வேட்டையை தீவிர படுத்திய நிலையில் இடைவிடாமல் மழை பெய்வதாலும் இருள் சூழ்ந்துள்ளதாலும் தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் மழை விடும் நேரத்தில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. குளிக்க சென்ற நீதிபதி காணாமல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி மற்றும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Next Story

