கிருஷ்ணநதி நீரை சட்ட விரோதமாக திருடும் ஆந்திர மாநிலம்
திருவள்ளூர்- தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி கண்டலேறு அணை கிருஷ்ணா நதி நீரை ஆந்திர மாநில விவசாயிகள் பாசனத்திற்கு எடுப்பதால் கூடுதலாக திறந்து விட வேண்டும் என தமிழக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் ஆந்திரா அரசுக்கு கோரிக்கை. கிருஷ்ணா நதிநீரை சட்ட விரோதமாக திருடும் ஆந்திரா விவசாயிகள் ஆந்திரா அரசு கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழகம் வந்து அடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தெலுங்கு - கங்கை ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் இரு தவனையாக 12 டி.எம்.சி தண்ணீரை தமிழக அரசு ஆந்திர மாநில அரசிடம் கிருஷ்ணாநீரை கேட்டு பெறுகிறது, அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 டி.எம்.சி 2ம் தவணை கிருஷ்ணா நதி நீர் கடந்த மார்ச் 28 ந்தேதி கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீர் தெலுங்கு - கங்கை கால்வாயில் தமிழகத்திற்கு ஆந்திர அரசு திறந்துவிட்டது, ஒரு மாத காலமாக 1/2 டி எம் சி நதி நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வந்தடைந்து பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் தேக்கி வைத்து சென்னை குடிநீருக்கு வழங்கப்பட்டு வந்தது, கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி தண்ணீர் நிறுத்தப்பட்டு காளஹஸ்தி பகுதியில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் தெலுங்கு -கங்கை கால்வாய் சீரமைப்பு பணியை ஆந்திர பொது பணி த்துறை மேற்கொண்டது பின்னர் கால்வாய் பணி சீரமைக்கப்பட்டு கடந்த மே 5 ந் தேதி மீண்டும் கிருஷ்ணா நதி நீர் 500 கன அடி முதல் 1650 கன அடி நீர் அதிகரிக்கப்பட்டு திறக்கப்பட்டது, வழக்கமாக கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி நீர் ஆறு அல்லது ஏழு நாட்களில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்ட் வந்தடையும் ஆனால் திறந்து விடப்பட்ட நீர் 13 நாட்கள் ஆகியும் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டது, இந்நிலையில் ஆந்திரா தெலுங்கு கங்கை கால்வாய் காளஹஸ்தி பகுதியில் இருந்து சத்தியவேடு வரை ஆந்திரா விவசாயிகள் சட்ட விரோதமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர் உறிஞ்சும் மின்மோட்டார் தெலுங்கு கங்கை கால்வாயில் வைத்து இரவும் பகலும் நீரை விவசாயத்திற்கு எடுப்பதால் தண்ணீர் தமிழகத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது, இது தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது நீர் உறிஞ்சும் மின் மோட்டார் வைத்து ஆந்திரா விவசாயிகள் நீர் எடுப்பது தொடர்பாக ஆந்திரா நீர்ப்பாசன துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் காலதாமதம் ஏற்பட்டாலும் ஒப்பந்தத்தின் படி இரண்டாவது தவனை நீரான நான்கு டி எம் சி நீரை முழுமையாக ஆந்திரா அரசிடமிருந்து கேட்டு பெறப்படும் என தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்
Next Story




