சாலையை சீரமைக்க கோரிக்கை

X
பெரம்பலூரில் சாலையை சீரமைக்க கோரிக்கை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பேருந்துகள், ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த பேருந்து நிலையத்தில் தரமான சாலைகள் அமைக்கப்படாததால் சாலைகள் மிகவும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே உடனடியாக பேருந்து நிலையத்தில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story

