தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இல்லை

செங்குணம் ஊராட்சியின் 2023-2024 ஆண்டின் பொது நிதியில் செங்குணம் இந்திரா நகரில் ஏரிக்கரை அருகே ரூ 1,05,000 மதிப்பீட்டில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இல்லை
பெரம்பலூர் வட்டம் செங்குணம் கிராமத்தில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கோடை காலம் தொடங்கிய நிலையில் தண்ணீர் இன்றி வரண்டு காணப்படுகிறது. மேலும் செங்குணம் ஊராட்சியின் 2023-2024 ஆண்டின் பொது நிதியில் செங்குணம் இந்திரா நகரில் ஏரிக்கரை அருகே ரூ 1,05,000 மதிப்பீட்டில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இல்லை இதனால் கால்நடைகள் வளர்ப்போர் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்லும் போது கால்நடைகளுக்கு குடிக்க தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனிடையே இன்று செங்குணம் புது கருப்பு சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஆழ்குழாய் அடிப்பம்பு உதவியுடன் ஒருவர் ஆடுகளுக்கு தண்ணீர் கொடுத்தார்
Next Story