மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்குச் சென்று மறுவாழ்வு சேவை

குழந்தைகளின் கல்வி பெண்களுக்கான பொருளாதார முன்னேற்றம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகள் என பல மாவட்டங்களில் தனது சேவைகளை செய்து வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசும் உலக வங்கியும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் முக்கியமான நோக்கம் கடை கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களின் இல்லங்களுக்குச் சென்று மறுவாழ்வு சேவை அளிப்பதாகும். இத்திட்டத்தினை பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டார அளவில் செயல்படுத்திட CSP-யாக மாநில ஆணையர் அவர்கள் மூலம் தர்மபுரியை தலைமையிடமாக கொண்டு செயல்படக்கூடிய SEEDS தன்னார்வ தொண்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகளின் கல்வி பெண்களுக்கான பொருளாதார முன்னேற்றம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகள் என பல மாவட்டங்களில் தனது சேவைகளை செய்து வருகிறது. இத்தொண்டு நிறுவனத்தின் மூலம் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் 10 நபர்கள் முன்கள பணியாளர்களாகவும் 4 நபர்கள் வட்டாரப் பணியாளர்களாகவும் மொத்தம் 56 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர் . தற்போது அனைத்து வட்டாரங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலும் இந்தப் பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகள் இல்லங்களுக்கும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அல்லாத குடும்பங்களுக்கும் சென்று பிரத்யேக செயலி மூலம் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை விவரங்களை சேகரிக்க உள்ளனர். இதற்காக இந்த 56 பணியாளர்களுக்கும் பாரத சாரணர் கட்டிடத்தில் மே 15,16,17 தேதிகளில் பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியை தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாநிலத் திட்ட அலுவலர் அரவிந்த் பரத்வாஜ் அவர்கள் வழங்கினார். இந்த பயிற்சியில் கலந்து கொண்ட பணியாளர்களுக்கு தாய்சேய் நல அலுவலர் டாக்டர் சந்தியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், கண்காணிப்பாளர் ரெங்கசாமி,SEEDS தொண்டு நிறுவன இயக்குனர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாவட்ட திட்ட அலுவலர் சத்யா மற்றும் முக்கிய நிபுணர்களான அருணா, நிஷா ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story