உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய பெண்ணிற்கு அரசு மரியாதை.

உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய பெண்ணிற்கு அரசு மரியாதை.
X
மதுரை திருமங்கலத்தில் மூளை சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் பள்ளக்காப்பட்டி தனியார் காஸ் நிறுவன தொழிலாளி சேதுபதியின் மனைவி காயத்ரி. இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு குழந்தைக்கு பால் கொடுத்தபோது திடீரென மயக்கமடைந்த காயத்ரி, கீழே விழுந்துள்ளார். இதனால் கப்பலுார் ரிங் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் மூளைச் சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகள் தேவைப்படும் பிற நோயாளிகளுக்கு தானமாக அளிக்க அவரது உறவினர்கள் முடிவு எடுத்து தானமாக அளிக்கப்பட்டது. பின்னர் உடல் சொந்த ஊரான பள்ளக்காப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு நேற்று (மே.18) திருமங்கலம் ஆர்.டி.ஓ., சிவஜோதி, வருவாய் ஆய்வாளர் தனசேகரன் மற்றும் உறவினர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.அதனை தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Next Story