திருவேங்கடத்தில் பள்ளி மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை

X
தென்காசி மாவட்டம் திருவேங்கடத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் அஜித்குமார் (16) என்ற பள்ளி மாணவன் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பெற்றோர் நல்ல படிக்க வேண்டும் என அறிவுரை கூறியதால் ஆத்திரம் இருந்த பள்ளி மாணவன் வீட்டில் இருந்த பூச்சி மருந்து குடித்து மயங்கி கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அஜித்குமாரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதி, அங்கு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவேங்கடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

