வேப்பனப்பள்ளி விரோதத்தில் பெண்ணை தாக்கிய மூன்று பேர் கைது.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்துள்ள கே.என்.போடூர் பகதியை சேர்ந்தவர் மல்லிகா (30) இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த ராஜசேகரன் (34) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்பபடுகிறது. இந்த நிலையில் கடந்த 16-ஆம் தேதி அன்று மல்லிகா உறவினர் வீட்டில் இருந்து கே.என்.போடூருக்கு சென்றார். அப்போது அங்கு இருந்த ராஜசேகரன், பத்மா (45), சசிரேகா (33) ஆகியோர் சேர்ந்து மல்லிகாவை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மல்லிகா கிருஷ்ணகிரி அரசு ம மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இந்த சம்பவம் குறித்து வேப்பனப்பள்ளி போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்து மல்லிகாவை தாக்கிய மூன்று பேரை கைது செய்தனர்.
Next Story

