கோவை: நிதி வசூல் செய்தால் கடும் நடவடிக்கை பாயும் - சேகர்பாபு

கோவை: நிதி வசூல் செய்தால் கடும் நடவடிக்கை பாயும் - சேகர்பாபு
X
தனியார் பெயரில் கோவில்களில் நிதி வசூல் செய்தால் கடும் நடவடிக்கை பாயும் என அமைச்சர் சேகர் பாபு எச்சரிக்கை.
கோவை மருதமலை கோவில் அருகே அமைய உள்ள பாலிடெக்னிக் கல்லூரிக்கான இடங்களை நேற்று ஆய்வு செய்ய வந்திருந்த அறநிலையத்துறை அமைச்சர் சேக்கர்பாபு, செய்தியாளர்களிடம் பேசும்போது, மருதமலை முருகன் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக புதிய பேருந்து நிலையம், நிழல் தரும் கண்ணாடி நடைபாதை, மற்றும் ஜூலை மாதத்திற்குள் மின் தூக்கி வசதி ஏற்பாடு செய்யப்படும். ஆசியாவிலேயே உயரமான 184 அடி உயர முருகர் சிலை நிறுவப்படும். மருதமலை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 20 முதல் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும். வன விலங்குகளின் நலன் கருதி, மருதமலையை சுற்றியுள்ள குப்பை மற்றும் கழிவுகளை அகற்ற பெருந்திட்டம் மேற்கொள்ளப்படும். கோவில்களின் பெயரில் தனியார் குழுக்கள் நிதி வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்றார்.
Next Story