கிறிஸ்தவ தொழிலாளர் இயக்க விழிப்புணர்வு பேரணி

X
குழித்துறை மறை மாவட்ட கிறிஸ்தவ தொழிலாளர் இயக்க விவசாயம் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று கோடி யூர் சிஎஸ்ஐ ஆலயத்திலிருந்து துவங்கி முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில் நிறைவடைந்தது. பேரணியை முளகுமூடு வட்டார தொழிலாளர் இயக்க இயக்குனர் அருட்பணியாளர் ராபர்ட் ஜான் கென்னடி, கோடியூர் சிஎஸ்ஐ சேகர போதகர் ஜஸ்டின் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் முளகுமூடு கிளை சார்பில் துவக்க வழிபாடு நடந்தது. குழித்துறை மறை மாவட்ட கிறிஸ்தவ தொழிலாளர் இயக்க தலைவர் எட்வின் ஆனந்த், முளகுமூடு தூய மரியன்னை பாலிக்கா அதிபர் கில்பர்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

