யோகா உலகசாதனை நம்ம கும்மிடிப்பூண்டி யில்

மகாராஜா ஆர்க்சரன் தனியார் பள்ளி வளாகத்தில் வினா யோகா மையத்தில் 60 மாணவர்கள் சலபாசனத்தில் 100 வினாடிக்கு யோகாசனம் செய்து நோவா உலக சாதனை
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள மகாராஜா ஆகர்சன் தனியார் பள்ளி வளாகத்தில் வினா ஸ்ரீ யோகா மையம் நடத்திய யோகாசன நிகழ்வில் 60 மாணவர்கள் சலபாசனத்தில் 100 வினாடிக்கு யோகாசனம் செய்து நோவா உலக சாதனையை நிகழ்த்தினர். கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் வினா ஸ்ரீ யோகா மைய மாணவர்கள் 60 பேர் சலபாசனத்தில் புதிய உலக சாதனை படைத்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் யோகா மையமான வினாஸ்ரீ யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பயிற்சிபெற்று வரும் 60 மாணவர்கள் ஒரே நேரத்தில் 100 வினாடிகள் கைகளை தரையில் பற்றி, கால்களை மேல் நோக்கி தூக்கி, உடலை வளைத்து செய்யக்கூடிய மிகவும் கடினமான சலபாசனத்தை செய்து புதிய உலக சாதனை படைத்தனர். இந்த உலக சாதனை நிகழ்வினை நோவா உலக சாதனை மையம் அங்கீகரித்துள்ளது. உலக சாதனை நிகழ்விற்கு ஊன்றுகோலாய் விளங்கிய யோகா வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற காளத்தீஸ்வரன் மற்றும் யோகா ஆசிரியைகள் அர்ச்சனா, வித்யா ஆகியோருக்கு சாதனை படைத்த மாணவர்களின் பெற்றோர்களும், பல்வேறு விளையாட்டு வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story