கோவை: கனமழை- வெள்ளை காடாக காட்சியளித்தல் லங்கா கார்னர் !

கோவை மாநகரிலும் புறநகர் பகுதிகளிலும் சுமார் இரண்டு மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
கோவை மாநகரிலும் புறநகர் பகுதிகளிலும் நேற்று சுமார் இரண்டு மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக மாநகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. குறிப்பாக, கோவை ரயில் நிலையம், லங்கா கார்னர் பகுதி, உப்பிலிபாளையம் மேம்பாலம் மற்றும் நீதிமன்றம் அருகே மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. லங்கா கார்னர் பகுதியில் பெட்ரோல் நிலையத்திற்கு உள்ளும் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர். மேலும், நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் போல் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். இதன் விளைவாக கோவை மாநகரின் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால், திடீர் மழையின் காரணமாக வெளியே வந்த பொதுமக்கள் வீடு திரும்ப முடியாமலும், வீட்டிலிருந்தவர்கள் வெளியே செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர்.
Next Story