தர்மபுரியில் நூல் வெளியீட்டு விழா

தர்மபுரியில் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் தலைமையில் நூல் வெளியீட்டு விழா
தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை நடந்தது. விழாவிற்கு எழுத்தாளர் சீதாலட்சுமி வரவேற்றார். கவிஞர் ஜெயபிரகாசம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பயிற்றுனர் குணசேகரன் விழா அறிமுக உரையாற்றி பேசினார். தமிழ் இயக்க மாவட்ட செயலாளர் அதியமான் நூல் குறித்து பேசினார். நூலாசிரியர் பொறியாளர் நரசிம்மன் எழுதிய ஊரெல்லாம் பூவாசம் என்ற புத்தகத்தை பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் பொன்.குமார் வெளியிட்டு சிறப்புரையாற்றி பேசினார். பச்சமுத்து கல்விக்குழுமத்தின் தாளாளர் பாஸ்கர் புத்தகத்தை பெற்றுக்கொண்டு வாழ்த்தி பேசினார். தர்மபுரி மாவட்ட கம்பன் கழக செயலாளர் குமரவேல் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர். இறுதியில் நூல் ஆசிரியர் பொறியாளர் நரசிம்மன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story