பல்லடம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை நாமக்கல் எம்பி ஆய்வு

பல்லடம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை நாமக்கல் எம்பி ஆய்வு
X
பல்லடம் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை ஆய்வு மேற்கொண்ட நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர். சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்துவதாக உறுதி.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மாதப்பூர் பகுதியில் மத்திய அரசின் சார்பில் புதிதாக சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதி மக்கள் சுங்கசாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் சுங்க அமைக்க வேண்டும் என விதிமுறைகள் இருந்தும் பல்லடம் நகராட்சி பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது எனவும் விதிமுறைகளை மீறி சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் அவர்களிடம் முறையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், மாதப்பூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மத்திய மாநில அரசுகளிடம் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்துவேன் என பொதுமக்களிடம் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்திக்கும் போது பொங்கலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் வாழும் மக்கள் இந்த சுங்கச்சாவடி அமைவதால் பல்லடம் மற்றும் திருப்பூர் பகுதிகளுக்கு சென்று வரும்போது சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய நிலையிலும், தங்கள் விலை பொருள்களை எடுத்துச் செல்லும் பொழுது சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளதால் அவர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும்.எனவே இந்தச் சாலையில் சுங்கச்சாவடி அகற்ற முதலமைச்சரிடமும்,அமைச்சரிடம் வலியுறுத்துவேன் என தெரிவித்தார். இந்தியா பாகிஸ்தான் நாட்டில் அமைதி நிலவுவதற்காக திமுக எம்பி கனிமொழி தலைமையில் குழு ஒன்று அமைத்து வெளிநாடுகளில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்து தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் அந்தக் குழுவில் இடம் பெற்று இந்திய நாட்டின் பாதுகாப்புக்காக முயற்சியில் ஈடுபடுவேன் என தெரிவித்தார். மேலும் சிவகிரியில் நடந்த கொடூர கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளதாகவும், தமிழக முதல்வர் இது போன்ற குற்ற செயல்கள் ஈடுபடுவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்கி தமிழக மக்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி தருவார் என தெரிவித்தார்.
Next Story