திருப்பூரில் இரவு நேரத்தில் வானில் தோன்றிய இரண்டு ஒளிப் பிரகாசங்கள் வீடியோ வைரல்

X
திருப்பூர் மாநகரம், காங்கேயம் ரோடு, கோம்பை தோட்டம், ஜம்ஜம் நகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இரவில் மேகமூட்டமான சூழ்நிலைகளில் வானில் தோன்றிய இரண்டு மர்ம ஒளி பிரகாசங்கள் கிட்டத்தட்ட 1 மணி நேரமாக நீடித்து வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது, இந்த அங்கும் இங்கும் ஓடிய மர்ம ஓளிகளை பொதுமக்கள் ஆச்சரியத்துடனும், ஆர்வமுடன் பார்த்தனர், இந்த இரண்டு ஒளிகள் வானில் செயற்கைக்கோள் அல்லது விண்கலம் போன்றவைகள் இருந்து வந்த ஒளியாக இருக்கலாம், என்றும் விண்வெளிக் கதிர்வீச்சுகள்,வானவில், நட்சத்திரங்கள், அல்லது பிற விண்வெளிக் காரணிகளால் ஏற்படலாம் என அறிவியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.திருப்பூரில் வானில் தோன்றிய இரண்டு ஒளிகள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Next Story

