ஓவியரை பாராட்டிய மதுரை எம்.பி.

X
மதுரை வைகையாற்றில் வண்டியூர் பகுதியில் உள்ள தேனூர் மண்டபத்தை அழகுற ஓவியம் வரைந்த ஓவியருக்கு மதுரை எம்பி வெங்கடேசன் வாழ்த்துக்களை பாராட்டுகளையும் சமூக வலைதளங்களில் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார். மற்ற மண்டபங்களெல்லாம் வரி செலுத்தி அழகரை அழைக்கும் ! பாய்ந்து வரும் வைகையின் தேனூர் மண்டபத்திற்கு அழகரே வரி செலுத்துவார் ! நீரின் திசை மடுக்கும் படகைப் போல , பல நூற்றாண்டுகளைக் கடந்து வரலாற்றின் திசை சொல்லும் கூம்பு வடிவ தேனூர் திருக்கண் மண்டபத்தின் ஓவியத்தை அழகுற வரைந்து ஓவியர் ரவிபேலட் தனது முகநூலில் பகிர்ந்திருந்தார் . அவருக்கு எனது அன்பு வாழ்த்துகள். என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story

