பேரூர்: பட்டீஸ்வரர் கோவிலில் அன்னதான கூடம், கோசாலை திறப்பு !

கோவை மாவட்டம், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் புதிதாக கட்டப்பட்ட அன்னதான கூடம் மற்றும் கோசாலையை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
கோவை மாவட்டம், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் புதிதாக கட்டப்பட்ட அன்னதான கூடம் மற்றும் கோசாலையை அமைச்சர் சேகர்பாபு நேற்று திறந்து வைத்தார். தொண்டைமுத்தூர் மாரியம்மன் மற்றும் பெரியநாயக்கர் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சேகர்பாபு, பின்னர் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்தார். கோவிலை அடுத்த பேரூர் பட்டீஸ்வரர் சுவாமி கோவிலுக்கு சென்றார். அங்கு ரூ.11.84 கோடி மதிப்பில் தர்பண மண்டபம், ரூ.51 லட்சத்தில் அன்னதான கூடம், ரூ.55 லட்சத்தில் கோசாலை, ரூ.16.30 லட்சத்தில் சிமெண்ட் சாலை, ரூ.11.70 லட்சத்தில் பணியாளர் கழிவறை ஆகியவை கட்டப்பட்டு உள்ளன. அவற்றையும் அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ், பேரூர் கோவில் துணை ஆணையர் விமலா, பேரூர் பேரூராட்சி அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story