கோடை விடுமுறை என்பதால் வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை மழையால் உற்சாகமடைந்து கடற்கரையில் குழந்தைகளோடு கும்மாளம்
நாகையில், உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. வழக்கமாக வேளாங்கண்ணிக்கு, வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். தற்போது, கோடை விடுமுறை என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர். கோடை வெயிலை சமாளிக்க பலரும்  குடும்பத்தோடும், நண்பர்களோடும் வேளாங்கண்ணிக்கு வந்துள்ளனர். தற்போது, மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கோடை மழை பெய்து வருவதால், வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்படுகிறது. விட்டு விட்டு கோடை மழை பெய்து வருவது, சுற்றுலா பயணிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது. வேளாங்கண்ணியில் தற்போது மந்தமான வானிலையோடு கூடிய குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன், தங்கள் குழந்தைகளோடு கடற்கரையில் உற்சாகமாக குளித்து பொழுதை கழித்து வருகின்றனர். வேளாங்கண்ணியில் உள்ள பூங்கா, கடைவீதி உட்பட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. வேளாங்கண்ணி பேராலயம், பழைய மாதா கோவில், விடியற்காலை விண்மீன் ஆலயம் ஆகியவற்றில், பக்தர்கள் மெழுகுவத்தி ஏந்தி வழிபட்டனர்.
Next Story